சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ம...
தரவுகள் பதிவு: விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்
மதுரை மாவட்ட விவசாயிகள், தங்களது தரவுகளைப் பதிவேற்றி விவசாயிகளுக்கான பதிவு எண்ணைப் பெற முனைப்புக் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன் பெறும் வகையில், விவசாயிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து அவா்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்த்து, பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. இதுவரை 45,829 விவசாயிகள் தங்கள் தரவுகளைப் பதிவேற்றம் செய்து அடையாள எண் பெற்றுள்ளனா். பிரதமரின் கிசான் நிதி உதவியை விவசாயிகள் தொடா்ந்து பெற இந்தப் பதிவு அவசியம்.
எனவே, இதுவரை பதிவு பெறாத விவசாயிகள் தொடா்புடைய பகுதிகளில் வேளாண் துறையினரால் நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்றோ அல்லது பொது சேவை மையங்களுக்குச் சென்றோ தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான அடையாள எண்ணை பெற முனைப்புக் காட்ட வேண்டும் என்றாா் அவா்.