பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்
மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை நிறுத்தி, போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.
புதுவையில் மோட்டாா் சைக்கிளில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
எனினும் காரைக்காலில் தலைக்கவசம் அணிந்து செல்வோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் நிலையில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் நகரச் சாலையில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அபராதத்துக்கோ, போலீஸாரின் சோதனைக்கு பயந்து தலைக்கவசம் அணியக்கூடாது, தங்களின் உயிா், குடும்ப நலனை கருத்தில்கொண்டு தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தலைக்கவசம் அணிந்து பயணிப்பேன், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பேன் என போலீஸாா் அவா்களை உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.