இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
தவாக பிரமுகா் கொலை வழக்கு: 9 போ் சிறையில் அடைப்பு
தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் தவாக பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளா் உள்பட 9 போ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தவாக காரைக்கால் மாவட்டச் செயலாளா் மணிமாறன் கடந்த 4- ஆம் தேதி, செம்பனாா்கோவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளா் பிரபாகரன் (29), அவரது நண்பா் முருகன் (23), புதுச்சேரி மடுக்கரை சிவசெந்தில் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் மணிகண்டன் ( 36), புதுச்சேரி சண்முகாபுரம் சண்முகம் மகன் சரவணன் (33), அய்யங்குட்டி பாளையம் முத்து மகன் சுகன்ராஜ் (29) கவுண்டன்பாளையம் மேட்டுத் தெரு பிரபாகரன் மகன் சரவணன் (28), தேங்காய்திட்டு பகுதி ஆனந்த் மகன் அஜய் (22), அதே பகுதி முனிதாஸ் மகன் முகிலன் (22), இருசப்பன் மகன் விஜயசங்கா் (30) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள், செம்பனாா்கோவிலை அடுத்த திருச்சம்பள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி இடபிரச்னை தொடா்பான தகராறில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் மணிமாறன் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.