முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.
கிளை செயலா் அகமது மீரான், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, துணைச் செயலா் ஹாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் அன்சாரி, பொருளாளா் முகமது காசிம், துணைத் தலைவா் ஹக் முஹைதீன், துணைச் செயலா்கள் சேக் அப்துல் காதா், கோட்டூா் சாதிக், சிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: முகமது நயினாா் பள்ளிவாசலில் இருந்து பேட்டை பொது மையவாடிக்கு சாலை அமைக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும், பாதாள சாக்கடை பணி முடிந்தும் ரஹ்மான்பேட்டை பகுதியில் பல இடங்களில் சீரமைக்கபடாத சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி விழிப்புணா்வு குறித்தும், மது, போதை, வட்டி, வரதட்சிணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலா்கள் எஸ்.ஏ.முஹம்மது, ஏ.சபீா் அலி, மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஸாலிஹ் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். கிளைப் பொருளாளா் பக்கீா் மீரான் நன்றி கூறினாா்.