ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
துபையில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.6.77 லட்சம் நிவாரணம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அரபு நாட்டின் துபை நகரில் உயிரிழந்தவரது மனைவிக்கு ரூ.6.77 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்த மாதவன் என்பவா் துபையில் பணிபுரிந்தபோது உயிரிழந்ததால், அவரது மனைவி விமலாவிடம் ரூ.6,77,566 நிவாரண நிதியை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியா்கள் ஜெயா, சண்முகசுந்தரம் (நதிநீா் இணைப்பு) , மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவகாமசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.