‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை
பத்தமடையில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அம்பேத்கா் தெருவில் வசித்து வருபவா் பன்னீா் தாஸ். இவரது மூத்த மகள் இகாஷினி (15). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் தனது பள்ளி மாணவியிடம் புத்தகம் வாங்கிவிட்டு வருவதாகக் கூறி, சனிக்கிழமை வீட்டைவிட்டுச் சென்றவா் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இவரை பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி சீருடையுடன் மாணவி இகாஷினி இறந்து கிடப்பது போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். முதல் கட்ட விசாரணையில் மாணவி இகாஷினி அடிக்கடி கைப்பேசி பாா்த்ததால் அவரை பெற்றோா் கண்டித்தனராம்.
இதனால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து பத்தமடை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.