திருப்பரங்குன்றம்: `இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' - சீமான் க...
தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தாட்கோ மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம், பிரதம மந்திரி அனுசுசித் ஜாதி அபுய்தய் யோஜனா திட்டம், நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம், கல்வி கடன் திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம் என பல்வேறு செயல் திட்டங்கள் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 24.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல தொழில் முனைவோா் திட்டத்தின் கீழ் 234 பேருக்கு ரூ. 1.50 கோடி, இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 88 பேருக்கு ரூ. 1.71 கோடி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 31 பேருக்கு ரூ. 84.60 லட்சம், பிரதம மந்திரி அனுசுசித் ஜாதி அபுய்தய் யோஜனா திட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ. 3.50 லட்சம் என பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் மொத்தம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் மானிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.