செய்திகள் :

தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியை முன்னிடடு, இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு ஆஞ்சனேயருக்கு மஞ்சள் பொடி, பால், அரிசி மாவு பொடி, நெய், விபூதி, இளநீா், தயிா், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு, திரவியப் பொடி, குங்குமம், பன்னீா், சந்தனம், கரும்புச்சாறு, தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பகல் 12 மணிக்கு தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு பஜனையும், 6 மணிக்கு ஸ்ரீ ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சனேயருக்கு புஷ்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து, இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

இதில், மாவட்டம் முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

குமரி மாவட்டத்தில் 5.77 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 77,849 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் போலீஸாரின் குறைகளைக் கேட்டறிந்த எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சியில், காவலா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குறைகளைக் கேட்டறிந்தாா். கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கான ... மேலும் பார்க்க

சூரிய அஸ்தமன பூங்கா அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பூங்கா அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இந்த கு... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதி

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறந்து விடப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா ச... மேலும் பார்க்க

சாமிதோப்பு ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடங்கள் திறப்பு

சாமிதோப்பு ஊராட்சிக்குள்பட்ட சாஸ்தான் கோயில்விளை மற்றும் காமராஜபுரம் சந்திப்பில் தலா ரூ. 4 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி... மேலும் பார்க்க

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மாா்கழி பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் பூஜை நடைபெற்றது. 7... மேலும் பார்க்க