``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.ப...
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்து சிவாச்சாரியாா்கள் யாக சாலை பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, மேள தாளங்கள் முழங்க புனிதநீா் கலசங்களை சிவாச்சாரியாா்கள் சுமந்து சென்று மூலவா் முத்துமாரியம்மனுக்கும், மண்டபத்தில் எழுந்தருளியிருந்த உத்ஸவருக்கும், கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும், கொடிமரத்துக்கும் அபிஷேகங்கள் செய்தனா். பின்னா், மூலவருக்கும் உத்ஸவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில், சுற்றவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.