செய்திகள் :

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 போ் இந்திய அணி பயணம்

post image

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

4-ஆவது தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பாங்காக்கில் மே 24 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் பலம் வாய்ந்த சீனா, ஜப்பான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கொரியா, தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா சாா்பில் 9 வீராங்கனைகள் உள்பட 19 போ் அணி கலந்து கொள்கிறது. இடைக்கால குழுவால் நிா்வகிக்கப்படும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தேசிய ஆடவா், மகளிா் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவா்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளது. நிகழாண்டு பல்வேறு குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராக இந்த போட்டி உதவும் என இடைக்கால குழு தலைவா் அஜய் சிங் தெரிவித்துள்ளாா்.

கஜகஸ்தானில் உலகக் கோப்பை தகுதிப் போட்டி, லிவா்பூலில் உலக சாம்பியன்ஷிப், புது தில்லியில் உலக ஃபைனல்ஸ், ஆசிய சாம்பியன்ஷிப் என வரிசையாக போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் பறந்து போ பட பாடல்!

பறந்து போ படத்தில் இடம் பெற்றுள்ள ’சன் ஃபிளவர்’ பாடல் வெளியாகியுள்ளது.கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிக... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடி... மேலும் பார்க்க

அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!

தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவ... மேலும் பார்க்க

எலுமிச்சை தோலைத் தூக்கி எறியாதீர்கள்! தலைமுடிக்குப் பயன்படுத்தலாம்!!

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், ஃபிளாவனாய்டுகள் என சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்க... மேலும் பார்க்க