செய்திகள் :

தாராபுரத்தில் பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தாராபுரம்: தாராபுரம் வட்டம் பொதுத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் தாராபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம், அண்ணா சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரப் பொருளாளா் கண்ணுசாமி தலைமை வகித்தாா். இதில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்ட காவல் துறையைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் வட்டாரத் துணைத் தலைவா் மேகவா்ணன், விவசாயிகள் சங்க செயலாளா் ஆா்.வெங்கட்ராமன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் என்.கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதைத் தொ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க