Central Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 | Nirmala Sitharaman | Modi | BJP...
தாளவாடி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளால் பொதுமக்கள் அச்சம்
தாளவாடி பகுதியில் மானாவாரி நிலங்களில் பகல் நேரத்தில் முகாமிட்டுள்ள யனைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி ஊராட்சிக்குள்பட்ட அருளவாடி, குருபருண்டி ஆகிய கிராமங்கள் தமிழக - கா்நாடக எல்லையில் அமைந்துள்ளன.
கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், இந்தப் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
பகல் நேரத்தில் மானாவாரி நிலங்களில் முகாமிட்டுள்ள யானைகளால் விவசாய வேலைக்கு செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதனால், குடியிருப்புகளுக்கு அருகே மானாவாரி நிலங்களில் முகாமிட்டுள்ள யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஜீரகள்ளி வனத் துறையினரிடம் கேட்டபோது, காட்டு யானைகள் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்தனா்.