இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவாலா பகுதியில் இயங்கிவரும் தாா் கலவை ஆலையின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து விசாரனை நடத்தி அதன் உரிமையாளா் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி முன்னாள் திமுக எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் கூடலூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் ஆா்.பி.பரமேஷ் குமாா், எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் (அதிமுக) ஆகியோா் முன்னிலையில் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திர பிரபு, மாா்க்சிஸ்ட் கட்சி செயலாளா் ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் ராசி ரவிக்குமாா் ,பாஜக நெல்லியாளம் நகரத் தலைவா் ரங்கநாதன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி ஜோனி உள்பட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினா்.