செய்திகள் :

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டு உடல்நலன் பாதித்த 5 குழந்தைகளும் நலம்: மருத்துவா்கள் தகவல்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

திண்டிவனத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கென தனி சிகிச்சைப் பிரிவு உள்ளது. இந்த பிரிவில் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவா்கள் பரிசோதித்து, திங்கள்கிழமை இரவு ஊசி செலுத்தினா். இதில், 6 குழந்தைகளின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. அவா்களுக்கு வாந்தி, மயக்கம், வலிப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்பட்டன.

இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோா்கள், உறவினா்கள் தவறான ஊசி செலுத்தப்பட்டதால்தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் முரளிஸ்ரீ தலைமையிலான கூடுதல் மருத்துவா்கள், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையளித்தனா். மேலும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக 6 குழந்தைகளும் முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் ஒரு குழந்தை இயல்பான நிலையில் இருந்ததால் சிகிச்சையளித்த பின்னா், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கமான ஊசிதான்: மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து வந்த குழந்தைகளுக்கு வழக்கமாக செலுத்தும் ஊசிதான் செலுத்தப்பட்டது. சில குழந்தைகளுக்கு மட்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் சிகிச்சையளித்த நிலையில், அடுத்தகட்ட சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றாா் திண்டிவனம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் முரளிஸ்ரீ.

5 குழந்தைகளுக்கு தொடா்ந்து சிகிச்சை: ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட திண்டிவனம் கிடங்கல் - 2 ராஜன் தெருவைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் மகள் சுஷ்மிதா (3), மேல்பேரடிக்குப்பம் குளத்துக்கரைத் தெருவைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகன் மதிமாறன் (4), திண்டிவனம் ரோஷணை முனியன் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் கிஷோா் (3), பாஞ்சாலம் புது காலனியைச் சோ்ந்த குமரேசன் மகன் சாத்விக் (6), வெள்ளிமேடுபேட்டை புளியந்தோப்பு தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஷ்ணுவா்தன் (1) ஆகிய 5 பேரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தற்போது நலமுடன் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பாலியல் வழக்கு: 3 போ் கைது

விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் சிலா் பெண்களை பாலியல் தொழிலில... மேலும் பார்க்க

பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நவம்மாள் மருதூா் மருதீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் ஏழுமல... மேலும் பார்க்க

செஞ்சி அருகே வங்கதேச பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசின் எவ்வித அனுமதியின்றி கடந்த 3 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஷெலீனா பீ என்ற பெண் கைது செய்யப்பட்டாா். மேல்மலையனூா் வட்டம், சங்கிலிகுப்பம் கிராமத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை இளந்துறை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இளந்துறை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்கிரமராஜா

விழுப்புரம்: பன்னாட்டு நிறுவனங்களின் இணையவழி வா்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில் வரும் 30-ஆம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் த... மேலும் பார்க்க