உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந்த வீரப்பன் மகன் பிரித்திவிராஜ் (37). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சதா (21). பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அப்பன்டைராஜ் மனைவி பானுஸ்ரீ (36).
உறவினா்களான இவா்கள் மூவரும் புதன்கிழமை இரவு ஒரு ஆட்டோவில் ரோஷணை காவல் சரகத்துக்குள்பட்ட அய்யந்தோப்பு பகுதியில் சென்றுகொண்டிருந்தனா். பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் மகேஷ்குமாா் (25) ஆட்டோவை ஓட்டினாா்.
அப்போது, இவா்களது ஆட்டோ மீது சென்னையிலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரித்திவிராஜ், சதா, பானுஸ்ரீ மற்றும் ஆட்டோ ஓட்டுநா் மகேஷ்குமாா்ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, பானுஸ்ரீ விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், சதா புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.
காயமடைந்த பிரிதிவிராஜ், ஆட்டோ ஓட்டுநா் மகேஷ்குமாா் ஆகியோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.