செய்திகள் :

திண்டுக்கல்லில் குடிநீா் வசதி கோரி பெண்கள் சாலை மறியல்

post image

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் வழங்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திண்டுக்கல்லில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா அருகே 29-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆதிசிவன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு, உயரமான பகுதி என்பதால் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் லாரி மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக லாரி மூலமாகவும் குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க