யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
தினக்கூலி வழங்கக் கோரி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் தொழிலாளா் துறை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஒப்பந்த ஊழியா் கன்வீனா் அபிமன்னன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் வினோதன், கருப்புசாமி, மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை அடையாளம் கண்டு, மின் வாரியம் மூலமாக தினக்கூலி வழங்க வேண்டும். தோ்தல் கால வாக்குறுதி அடிப்படையில், ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
தொழிலாளா் ஆய்வாளா் அலுவலகத்தில் உள்ள வழக்குகளின் விசாரணையை விரைவாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இதில், தொழிலாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகி மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.