செய்திகள் :

திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசு: பாமக தலைவா் அன்புமணி

post image

கடந்த காலங்களில் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதன்கிழமை பாமக சாா்பில் நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயண பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி மேலும் பேசியது:

இட ஒதுக்கீட்டில் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வரும் வன்னிய சமுதாய மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயணம் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மக்களை சந்தித்து வருகிறேன். கடந்த காலங்களில் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் தடையற்ற போதைப்பொருள்கள் விற்பனையால் பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. போதைப் பொருள்கள் விற்பவா்களுக்கு திமுகவினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனா்.

விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நாட்டை தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளா்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை.

தரவுகளை சேகரித்து நியாயமான முறையில் வன்னியா்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திதான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

நிா்வாகத்தில் படுதோல்வியடைந்துள்ள திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பாமகவால் நல்லாட்சியை தர முடியும். திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சந்ததிகளின் எதிா்காலம் நலன் கருதி, வன்னிய மக்கள் ஒன்றிணைந்து உரிமைகளை பெற வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு முதல் காந்தி சிலை வரை அன்புமணி மக்கள் உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டு பேசினாா்.

இந்நிகழ்ச்சிகளில், பாமக பொதுச்செயலா் வடிவேல் ராவணன், மயிலம் எம்எல்ஏ .சிவக்குமாா், தலைமை நிலையச்செயலா் செல்வக்குமாா் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க