செய்திகள் :

``திமுக ஆட்சியில் என்கவுண்டர், மனித உரிமை மீறல்.. தமிழகம் முதலிடம்'' - 75 இயக்கங்கள் கண்டன அறிக்கை!

post image

"திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்" பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu police encounter

கைது செய்து, துப்பாக்கிச் சூடு..

இதுகுறித்து அறிக்கையில், " மார்ச் 25 ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31 ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திரபோஸ், ஏப்ரல் 1 ஆம் தேதி கடலூரில் 19 வயது முட்டை விஜய் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்காப்பு என்ற பெயரில் பொய்யான மோதல் சாவுகளை நடத்திவருகிறது காவல்துறை.

குற்றவாளிகளைக் கைது செய்த பின்பு, மீண்டும் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் மனித உரிமை மீறல் கலாசாரத்தை உருவாக்குவதில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்கிறது.

மார்ச் 18 ஆம் தேதி ஈரோட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும்,

19-ஆம் தேதி திருநெல்வேலியில், முன்னாள் காவல் துணை ஆய்வாளர் கொலை வழக்கில் முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரையும், 20 ஆம் தேதி சிதம்பரத்தில் ஸ்டீபன் என்பவரையும் சுட்டுப் பிடித்தனர்.

23-ஆம் தேதி தேனியில் காவலர் கொலை வழக்கில் பொன்வண்ணன் என்பவரை, 28-ஆம் தேதி செங்கல்பட்டு வனப்பகுதியில் அசோக் என்பவரையும் சுட்டுப் பிடித்தனர்.

கூட்டறிக்கை

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் மட்டும் இப்படிக் கைது செய்த பின்பு 6 பேரைச் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசாரால் சுடப்பட்டவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை, குற்றவாளிகளை முறையாக கைது செய்து, புலன்விசாரணை செய்து, நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்து அவர்களை குற்ற செயல்பாட்டிருலிந்து தடுத்து நிறுத்துவதை வரவேற்கிறோம். ஆனால், போலீசார் தாமே சட்டத்தைக் கையில் எடுத்து தண்டிப்பதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. .

`இந்திய வரலாற்றில் இல்லாத வன்முறை..'

பொதுவாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் நாள்களில், காவல்துறையின் சட்ட விரோதச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பார்கள் என்பதால் காவல் நிலையங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படும். ஆனால் தற்போதைய நிலை தலைகீழாக உள்ளது.

கடந்த சில நாள்களில், 3 என்கவுண்டர்கள், 6 துப்பாக்கிச் சூடுகள், பலர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவங்கள் என சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத வன்முறையை, மனித உரிமை மீறலைத் தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் காவல்துறை திட்டமிட்டு நடத்தி வருகிறது.

Encounter? represntational image

`அதிகாரத் திமிருடன் மனித உரிமை மீறல்..'

இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காக்கிறது. தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இதுபோன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும்.

சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது

75 அமைப்புகள்

சமூகத்தில் நடந்து வரும் குற்றங்களை, கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களை செயல்பட விடாமல் தடுப்பதற்கும், எதிர் வன்முறை தீர்வாகாது. நீதிமன்றத்தால் வழங்கப்படும் மரண தண்டனையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஒழித்துவிட்ட நிலையில், விசாரணை அதிகாரம் மட்டுமே பெற்ற காவல்துறை, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சட்ட விரோதமாக மனித உயிரைப் பறிப்பது குற்றமாகும்.

சமூகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பதற்காக, கல்வி, பயிற்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய காவல்துறை குறுக்கு வழியில் வன்முறையில் ஈடுபட்டு என்கவுண்டர் (Extrajudicial Killings) செய்வதை 75 இயக்கங்கள் கூட்டாக வண்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற வன்முறை மற்றும் என்கவுண்டரில் ஈடுபடும் போலீசார், உத்தரவிடும் உயர் அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்து பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

`விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும்'

காவல் நிலைய சித்திரவதை மரணம் மற்றும் என்கவுன்டர் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர்கள், வெளிப்படைத் தன்மையோடு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் (SHRC) தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மாநில மனித உரிமை ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.

Tamilnadu CM MK Stalin

மாநில இலவச சட்ட உதவி ஆணைக்குழு இதுபோன்ற பொய்யான மோதல் சாவுகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பிரிவு 12 இன் கீழ் தானாக முன்வந்து வழக்கு நடத்த வேண்டும்.

காவல் வன்முறைகள், குறிப்பாகப் பொய் மோதல் கொலைகள், வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் அருவருப்பாகும். 2022 ஆம் ஆண்டு சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞன் காவல் சித்திரவதையில் இறந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரையில், இனிமேல் இதுபோன்ற காவல் சித்திரவதைகள், வன்முறைகள் தமிழ்நாட்டில் நடக்காது என உத்தரவாதம் கொடுத்தார்.

முதல்வர் கொடுத்த உத்தரவாதத்தை நிலைநிறுத்த, இதுபோன்ற காவல் வன்முறைகளை தடுக்க முதல்வர் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பொய் மோதல் சாவுகள், காவல் சித்திரவதைகள் தொடருமானால் மக்கள் இயக்கங்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் கட்டாய நிலை ஏற்படும்.

Encounter

எனவே தமிழ்நாடு அரசு காவல் வன்முறைகளையும், என்கவுண்டர் கொலைகளையும் தடுப்பதற்கு உடனே ஆவண செய்யக் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் எஸ்.வி.ராஜதுரை, கொளத்தூர் மணி, நெல்லை முபாரக், தியாகு, கோவன், ஹைதர் அலி, திருமுருகன் காந்தி, மீ.த.பாண்டியன், ஹென்றி திபேன், கண குறிஞ்சி, அ.மார்க்ஸ், பொழிலன், கிறிஸ்டினா சாமி, ப.பா.மோகன், வாஞ்சிநாதன், செயராமன், சுப. உதயகுமாரன், ச.பாலமுருகன், சுதா ராமலிங்கம், பிரபா கல்வி மணி, வீ.அரசு,.எஸ்.அஜிதா, இரா.முரளி உள்ளிட்ட 75 பேர் கையெழுத்திட்டுள்ளனர்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க