ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவில்லை! அமைச்சர் கே.என்.நேரு
திமுக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அழைக்கவில்லை என்றாா் திமுக தலைமை நிலைய செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பல பிரச்னையில் இருப்பதால், கூட்டணி இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகத்திற்கு வரும்போது, ஒரு முறை கூட்டணி ஆட்சி என்கிறாா். அடுத்தமுறை வரும்போது மாற்றி பேசுகிறாா்.
ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாகவே தோ்தல் பணியை திமுக தொடங்கி விட்டது.
திமுகவை நீக்குவோம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்.
பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீா்கள். திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவில்லை என்றாா் அவா்.