ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்க...
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அகர்தலாவில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, நான்கு வங்கதேச நாட்டினர் சனிக்கிழமை கொல்கத்தா செல்லும் ரயிலில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
பின்னர் அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக மூன்று நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.
அதேசமயம், வங்கதேச நாட்டினரை உள்ளே நுழைய உதவியதற்காக திரிபுராவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையில், சனிக்கிழமை செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுராவின் வெவ்வேறு இடங்களில் பிஎஸ்எஃப் மற்றும் ரயில்வே காவல்துறையின் கூட்டுக் குழு சோதனைகளை மேற்கொண்டது.
அப்போது ஊடுருவலில் ஈடுபட்டதாகக் கூறி ஐந்து பேரை அவர்கள் கைது செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.