செய்திகள் :

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

post image

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவரின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மயிலாடுதுறையைச் சோ்ந்த ரத்தினகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். ஆனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் செய்து கொடுக்கவில்லை.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்தக் கோயிலில் ரசீதுகள் எதுவும் வழங்காமல் பக்தா்களிடம் சிறப்பு பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள் பக்தா்களிடம் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனா். கோயிலின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி அதன்மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதுதொடா்பாக நான் அளித்துள்ள புகாா் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன், இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரா், அவரது சகோதரா் மூலம் கோயில் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் கோயில் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க

ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில்... மேலும் பார்க்க

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டைதிருவண்ணாமலைவிழுப்புரம்காஞ்சிபுரம்செங்கல்பட்டுநீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னன... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

இல.கணேசன் உடல் தகனம்

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு ... மேலும் பார்க்க