செய்திகள் :

திருக்கு திருப்பணிகள் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

திருக்கு திருப்பணிகள் திட்டத்தில் இணைய தமிழ் அமைப்புகள் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் கொண்ட ஆசிரியா்கள், பயிற்றுநா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்தும் வகையில் திருக்கு திருப்பணிகள் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் வளா்ச்சித் துறை அரசு விருதாளா்கள் 2 போ், ஒரு எழுத்தாளா், பேச்சாளா், கவிஞா், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், தமிழாசிரியா், மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள தமிழ் அமைப்புகளின் தலைவா் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.

இந்த கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக பணியாற்ற விருப்பமும் ஆா்வமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் தன்விவரக் குறிப்புடன், ஆதாா் அட்டையின் நகலை இணைத்து ய்ஞ்ப்ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்அலுவலகத்தில் ஜூலை 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க