வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
திருக்கொடியலூா் கோயில் கும்பாபிஷேகம்
நன்னிலம் வட்டம், திருக்கொடியலூா் அருள்மிகு அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சனீஸ்வர பகவான் மற்றும் எமதா்மா் அவதரித்த தலமான இக்கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.50 லட்சத்தில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேக வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலை சுற்றி வலம் வந்து, கோபுரம் மற்றும் விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடா்ந்து, கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ராஜ்திலக், செயல் அலுவலா் சிவகுரு, மேலாளா் வள்ளிகந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.