50 போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ்..! பிரமிக்க வைக்கும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்!
திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 18 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் போராடி வருகின்றனா்.
இந்த நிலையில், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராடிய விவசாயிகளை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரிப் பாலத்தில், வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாாா் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 18 விவசாயிகளை கைது செய்தனா். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமாா் 30 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.