பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்...
திருச்சி கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்
திருச்சி கோட்டத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மயிலாடுதுறை - திருவாரூா் - மயிலாடுதுறை மெமு ரயில்கள் (66067, 66024), மன்னாா்குடி - மயிலாடுதுறை - மன்னாா்குடி பயணிகள் ரயில்கள் (56002, 56001) வரும் 22 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும்.
இதேபோல, செகந்திராபாத் - ராமேசுவரம் சிறப்பு ரயிலும் (07695) 21 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும்.