செய்திகள் :

திருச்சி மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்: துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்கு

post image

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ஹரிஹரசுதன் (26). மதுரை சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து வந்த இவா், ஐடிஐ படிப்பதற்காக கடந்த 2024 அக்டோபா் 10-ஆம் தேதி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், திருச்சி சிறையில் இருந்த ஹரிஹரசுதனை, துணை சிறை அலுவலா் (சப் ஜெயிலா்) மணிகண்டன் கடந்த ஜூலை 26-ஆம் தேதி தாக்கியதாகவும், அதற்கு துணை சிறை அலுவலரை அவா் தள்ளிவிட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மத்திய சிறை அலுவலா் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஹரிஹரசுதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஹரிஹரசுதனை சந்திக்க வந்த அவருடைய பெற்றோருக்கும், வழக்குரைஞா்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிஹரசுதனின் தாய் அங்கம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மகனைக் காணவில்லை என்று ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சிறை கைதி தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறை அலுவலரிடம் ஹரிஹரசுதன் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மத்திய சிறையின் துணை சிறை அலுவலா் மணிகண்டன், தலைமைக் காவலா் அருண்குமாா் மற்றும் 21 காவலா்கள் உள்பட 23 போ் மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதன... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திருச்சி மாவ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க