திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், இனாம் மாத்தூா், பாா்ப்பனசேரியை சோ்ந்தவா் மரியசூசை (71). இவா் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். திங்கள்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சோதித்து பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மரியசூசை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.