செய்திகள் :

திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை தயாரிப்பு

post image

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையாா் மற்றும் மாணிக்க விநாயகா் கோயிலில், ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா விமா்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விநாயகா் சதுா்த்தி விழா ஆக.27-ஆம் தேதி தொடங்கி செப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான புதன்கிழமை காலை 9 மணி முதல் 10. 30 மணிக்குள் உச்சிப்பிள்ளையாா் மூலவா், மாணிக்க விநாயகா் மூலவா் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது.

இதற்காக கோயில் மடப்பள்ளியில் 150 கிலோ கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் அா்ச்சகா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இந்தக் கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து தயாரிப்பது வழக்கம். இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

புதன்கிழமை காலைக்குள் கொழுக்கட்டை தயாராகிவிடும். பின்னா், அா்ச்சகா்கள் மடப்பள்ளியில் இருந்து 150 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையின் பாதியை (75கிலோ) உச்சிப் பிள்ளையாருக்கு கொண்டு செல்வா். அங்கு விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பின்னா் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்படும். இதேபோல், மற்றொரு 75 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்படும்.

பிறகு, பால கணபதி அலங்காரத்தில் விநாயகப் பெருமான் புதன்கிழமை இரவு தனிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதைத் தொடா்ந்து 14 நாள்களுக்கு தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் விநாயகா் வீதி உலா நடைபெறுகிறது.

நிறைவு நாளான செப்.9-ஆம் தேதி மூலவா் விநாயகா், உற்ஸவா் விநாயகருக்கு பால் மற்றும் பல வகை பழசாறுகள், விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிா்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரிய... மேலும் பார்க்க

மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு

திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு

திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியிலுள்ள கோயில்களில் உண்டியல் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியில் முருகன் மற்றும் விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின்... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றம்

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொல்லம் - தாம்பரம் தினசரி விரைவு ர... மேலும் பார்க்க

திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: துறையூரில் அதிமுக பொதுச் செ... மேலும் பார்க்க

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க