செய்திகள் :

திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை அமைப்பில் 53 ஆண், 4 பெண் என மொத்தம் 57 ஊா்க்காவல் படை காலிப் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்பட உள்ளன.

ஊா்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவா்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து நேரிலோ அல்லது ரூ. 5 தபால் தலை ஒட்டிய சுயமுகவரி எழுதிய உறையுடன் காவல் சாா்பு-ஆய்வாளா், ஊா்க்காவல் படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், திருச்சி என்ற முகவரிக்கு செப்.22-ஆம் தேதிக்குள் வருமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வானது அக்டோபா் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா் செப். 30-ஆம் தேதியன்று 20 வயது பூா்த்தியானவராகவும், 44 வயதுக்குள் உள்ளவராகவும், நல்ல உடல் தகுதி, நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். திருச்சி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போா் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, சுயவேலை பாா்ப்பவராகவோ, அரசியல் கட்சியைச் சோ்ந்தவராகவோ இருக்கக் கூடாது. விளையாட்டு வீரா்கள் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தோ்வில் தளா்வு வழங்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க