இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் வேளாண் சங்கத்தில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்துக்கு மொத்தம் 45 மூட்டைகள் வரத்து இருந்தன. இதன் மதிப்பு ரூ. 3.87 லட்சம் ஆகும். இதில், முதல்தர கொப்பரை ரூ. 200.75 முதல் ரூ. 228.75 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 145.10 முதல் ரூ. 170.25 வரையிலும் விற்பனையானது.
மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், 43 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தன. இதில், முதல்தரம் ரூ. 228.00 முதல் ரூ. 196.00 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 161.00 முதல் ரூ. 146 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3.58 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.