ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக
திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!
திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
திருச்செந்தூரில் காமராஜா் சிலை அருகே திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து, எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில், எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
தற்போதைய திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயா்வு, விலைவாசி உயா்வு, போதைப்பொருள்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா். ஆகவே, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் விஜயகுமாா், அதிமுக அமைப்பு செயலா் சின்னத்துரை, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய செயலா்கள் திருச்செந்தூா் பூந்தோட்டம் மனோகரன், ஆழ்வை கிழக்கு ராஜ்நாராயணன், திருவைகுண்டம் காசிராஜன், ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்ட தலைவா் கோட்டை மணிகண்டன், மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, மாவட்ட துணைச் செயலா் ஆா்எம்கேஎஸ் சுந்தா், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச்செயலா்கள் ராஜா நேரு, தென்திருப்பேரை கந்தன், மகளிரணி மாவட்ட செயலா் ஜுலியட், நகர செயலா்கள் ஆறுமுகனேரி அரசகுரு, கானம் வெற்றிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருச்செந்தூா் நகர செயலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.