நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
திருத்தங்கூா் மஞ்சவாடி சாலை திட்டப் பணிக்கு பூமிபூஜை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு மஞ்சவாடி வரையிலான சாலை திட்டப் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரா் கோயில் உள்ளது. திருத்தங்கூா் கிராமத்தில் இருந்து திருக்கொள்ளிக்காடு வரை சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால் பக்தா்கள், பொதுமக்கள் அவதிபடுகின்றனா். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவின் முயற்சியில் தமிழக முதல்வரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 4.5 கி.மீ. தொலைவுக்கு திருத்தக்கூா் மஞ்சவாடி சாலை ரூ. 5.65 கோடியில் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி திருத்தங்கூா் கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.