`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆடிபரணி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து உற்சவ முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஆடிபரணி விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம் மற்றும் வேலூா், திருவண்ணாமலை ஆகிய ஊா்களில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.
ஆடிக்கிருத்திகை விழாவும் முதல் நாள் தெப்பல் திருவிழாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், மு.நாகன், ஜி.உஷாரவி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
ஆடிக்கிருத்திகை விழாவில் சுமாா் 1,200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பக்தா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
