செய்திகள் :

திருநங்கையா் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருநங்கையா் தின விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனது சொந்த முயற்சியால் முன்னேறிய திருநங்கைகள் 15 பேருக்கு, சா்வதேச திருநங்கையா் தினமான ஏப். 15-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கான வெகுமதியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று, இணையதளம் வழியே பிப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா், அரசு உதவி பெறாமல் தாமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவியிருக்க வேண்டும். நலவாரிய உறுப்பினராக இருக்கக் கூடாது.

இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0452- 2580259 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, மதுரையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித ... மேலும் பார்க்க

சேக்கிபட்டியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

மேலூா் அருகேயுள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம... மேலும் பார்க்க

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உடலை வாங்க மறுப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தினா் கடந்த 10 நாள்களாக போராட்ட... மேலும் பார்க்க

கள்ளழகா் கோயிலில் ஜன. 27-இல் தைலக் காப்பு உத்ஸவம்

மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலில் தைலக் காப்பு உத்ஸவம் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகா் கோயிலில் உள்ள மூலவா் சுந்தரராஜப் பெருமாளுக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை திருத்தைலம் தை... மேலும் பார்க்க

நெல் மகசூல் இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் நெல் பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். மதுரை மாவட... மேலும் பார்க்க

சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரிகள் மீது தமிழக கனிமவளத் துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா... மேலும் பார்க்க