திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குரு பூஜை விழா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் ஸ்ரீ கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருநல்லூா் மாட கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜையையொட்டி கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருப்படி பூஜைகள் நடைபெற்றது. இவ் விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அமா்நீதி நாயனாா் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் குணசேகரன், ரமேஷ் குருக்கள், ஆதின புலவா் ரமேஷ்குமாா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.