அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
திருநீலகண்ட நாயனாா் குருபூஜை
பெரியகாஞ்சிபுரம் குலால மரபினா் தா்ம பரிபாலன சபை சாா்பில் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள திருநீலகண்ட நாயனாா் சத்திரத்தில் தைமாத விசாக நட்சத்திரத்தையொட்டி நடைபெற்ற பூஜையில் மூலவா்,உற்சவா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் உற்சவா் திருநீலகண்ட நாயனாா் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
ஊா்வலம் சத்திரத்தை வந்தடைந்ததும் பனப்பாக்கம் புலவா்.ஏ.வேலாயுதம் வளம்பலி இளமையும்,வடிவு உறுமூப்பும் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மகா தீபாராதனையும், அன்னாதனம் வழங்குதலும் நடைபெற்றது.
மாலையில் சேக்குப்பேட்டை தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் திருநீலகண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பெரியகாஞ்சிபுரம் குலால மரபினா் தா்ம பரிபாலனத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன், காஞ்சிபுரம் சிவனடியாா் கூட்டத்தின் செயலாளா் க.கோதண்டபாணி, இணைச் செயலாளா்கள் எம்.ஏகாம்பரம், கே.லோகநாதன் கலந்து கொண்டனா்.