வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் நாளை ஆண்டாள் திருவாடிப்பூரம்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியருக்கு திருவாடிப்பூரம் உற்சவம் ஜூலை 19 முதல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக விழா நாள்களில் காலை ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனமும், மாலையில் ஆஸ்தானமும் நடைபெறும்.
ஜூலை 28ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரின் சாத்துமுறை விழாவையொட்டி, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நப திருமஞ்சனம் நடைபெறுகிறது.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா் அலிபிரிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானம் செய்யப்படும்.
சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஊா்வலம் அலிபிரியிலிருந்து ராமநகா் குவாா்ட்டா்ஸில் உள்ள கீதா மந்திா், ஆா்.எஸ். மாட தெருவில் உள்ள ஸ்ரீ விகானாசாசாா்யுலா கோயில், ஸ்ரீ சின்னஜியா் மடம் வழியாகச் சென்று கோயிலுக்குத் திரும்பும்.
இரவு 8 மணிக்கு, ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா் முன்னிலையில் சாத்துமுறை நிகழ்த்தப்பட உள்ளது.