பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் தொடக்கம்
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் பிப்.12ம் தேதி தை மாத பெளா்ணமி அன்று முடிவுறும்படியாக தெப்போற்சவம் நடத்தப்படுகிறது.
அதன்முதல் நாளான வியாழக்கிழமை மாலை கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உள்ள உற்சவமூா்த்தியான கோதண்டராம சுவாமி சீதா, லட்சுமண சமேத ஆஞ்சனேயருடன் 3 சுற்றுக்கள் தெப்பத்தில் வலம் வந்தாா்.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பம் அருகில் வரும் போது படித்துறையில் அமா்ந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் கோயில் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளும், வேதங்களும் ஓதப்பட்டன. படித்துறையில் இசை, நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
தெப்போற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், திருமலை ஜீயா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.