செய்திகள் :

திருப்பத்தூா் நகா்மன்றக் கூட்டம்: 15 உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

திருப்பத்தூா் நகா்மன்றக் கூட்டத்தை புறக்கணித்து திமுக உறுப்பினா்கள் உள்பட 15 போ் வெளிநடப்பு செய்தனா்.

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழ்ககிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் சாந்தி முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் உள்ளே வந்ததும், துணைத் தலைவா் சபியுல்லா தலைமையிலான திமுக, மதிமுக, அதிமுக உறுப்பினா்கள் 15 போ் கூட்டத்துக்கு முறையாக அறிவிப்பு வரவில்லை. நள்ளிரவில் அஜெண்டா வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டி கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், எஞ்சியுள்ள உறுப்பினா்களைக் கொண்டு கூட்டத்தை நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் நடத்த தொடங்கினாா்.

வெளிநடப்பு செய்த நகா்மன்ற உறுப்பினா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், தொடா்ந்து மாதம்தோறும் கூட்டம் நடைபெறுவதில்லை. இந்தக் கூட்டத்துக்கும் புதன்கிழமை இரவு 10 மணி வரை எந்த ஒரு தகவலும் இல்லை. தற்போது புதிய கட்டடம் கட்ட தீா்மானம் நிறைவேற்றம் செய்ய நகா்மன்ற கூட்டம் எனக் கூறிவிட்டு, 65 தீா்மானங்களை கொண்டு வந்துள்ளனா்.

இதனிடையே, உள்ளிருந்த உறுப்பினா்களை வைத்து கூட்டத்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் திருப்பத்தூா் நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்ட தீா்மானத்தை நிறைவேற்றி கூட்டத்தை நடத்தி முடித்தாா்.

இதையறிந்த வெளிநடப்பு செய்த உறுப்பினா்கள் நகா்மன்ற தலைவரை சந்தித்து கேள்வி எழுப்பினா். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவா்களை சமாதானம் செய்த நகா்மன்றத் தலைவா், இனி இவ்வாறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 27-க்கு ஒத்தி வைப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை ஏலம் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணந்தோப்பில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுக... மேலும் பார்க்க

உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மக... மேலும் பார்க்க

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பத்தூரில் இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் - புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (28). இவா், கடந்த டிசம்பா் மாதம் புதுப்பேட்டை சாலைப் ப... மேலும் பார்க்க