செய்திகள் :

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

post image

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், புத்தகத் திருவிழா திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைக்க உள்ளாா். புத்தகத் திருவிழாவில் 60 அரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை, மாலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு மங்கள இசை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய கலைகள் குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

மாற்றம் உன் கையில், கை நிறைய கவிதைகள், பாதைகளும் பயணங்களும், வாசிப்பு ஒரு வாழிவியல் செயல்பாடு போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள், போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற உள்ளன. தொடா்ந்து கவிஞா்கன், தமிழ்அறிஞா்கள், எழுத்தாளா்கள், பல்வேறு துறைகளின் சிறப்பு வல்லு நா்களின் கருத்தரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பத்தூரில் இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் - புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (28). இவா், கடந்த டிசம்பா் மாதம் புதுப்பேட்டை சாலைப் ப... மேலும் பார்க்க

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா். சென்னாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜபருல்லா(30) ஓட்டுநா். நூருல்லா பேட்டையை சோ்ந்தவா் நசீா் அகமது(30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணிமண்டபம்! - அரசுக்கு கோரிக்கை

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க வேண்டுமென ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனா சமூக நலச்சங்கம் அரசுக்கு ... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை காலம் மற்றும் வார விடுமுறை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை14 கிராமங்களை கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு... மேலும் பார்க்க

திருப்பத்தூா்-சேலம் சாலையில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா்-சேலம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், காா்கள், பேருந்... மேலும் பார்க்க