செய்திகள் :

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

post image

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி (26). ஐ.டி. ஊழியராகப் பணியாற்றி வந்த பிரீத்திக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சதீஷ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தத் திருமணத்தின்போது, தாய் சுகந்தி தனது மகள் பிரீத்திக்கு 120 பவுன் நகை, ரூ. 25 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஆகியவற்றைத் தந்துள்ளார்.

பிரீத்தி-சதீஷ்வர்
பிரீத்தி-சதீஷ்வர்

திருமணத்திற்குப் பிறகு கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் பிரீத்தியைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 11-ஆம் தேதி தனது தாய் வீட்டுக்கு பிரீத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரீத்தியின் குடும்பச் சொத்து அண்மையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதில், பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்தப் பணத்தைத் தன்னிடம் தருமாறு சதீஷ்வர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரீத்தி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, நல்லூர் போலீஸார் பிரீத்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமாக சதீஷ்வர், விஜயகுமார், உமா ஆகிய மூவரைக் கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பிரீத்தியின் தாய் சுகந்தி தெரிவித்தார்.

திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் பிரீத்தியின் தற்கொலை தொடர்பாக திருப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அதில், வரதட்சணை காரணமாக பிரீத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுகந்தி
சுகந்தி

இதைத் தொடர்ந்து, பிரீத்தியின் தாய் சுகந்தி அளித்த புகாரின் அடிப்படையில், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வரதட்சணை காரணமாக இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட நிலையில், வரதட்சணை காரணமாக மீண்டும் ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க