செய்திகள் :

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

post image

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாரதியாா் பல்கலைக்கழக மேலாண்மை மற்றும் தொழில்முனைவோா் துறை இணைப் பேராசிரியா் ஜி.பரணி கலந்து கொண்டு, மாணவியா் பேரவையை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினராக லிவா்பூல் நிறுவனத்தின் தெற்காசிய மேலாளா் ஏக்தா சபா்வால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் தலைவா் மற்றும் தாளாளரும், கோவை மண்டல கூட்டுறவு வீட்டுவசதி சங்க துணைப் பதிவாளருமான வி.செந்தில்நாதன், கல்லூரி முதல்வா் டி.வசந்தி, கல்லூரி தொடா்பு அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான காா்த்திகை செல்வி, நிா்வாக அலுவலா் என். நிா்மல்ராஜ், திருப்பூா் கூட்டுறவு சங்க செயலாளா் சி. முத்துரத்தினம், சாா்பதிவாளா் நிவேதா மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம்... மேலும் பார்க்க

நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளி திருடிய 4 பெண்கள் கைது!

பெருமாநல்லூா் அருகே நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளி கொலுசுகளை திருடிய 4 பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா்- திருப்பூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் மகன் பிரகதீஷ் (47).... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம்

குன்னத்தூா் உபகோட்டம் பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற... மேலும் பார்க்க

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க