தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை
இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம் சாலை உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அன்சா், பொருளாளா் தௌபிக், துணைத் தலைவா் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பிகாரில் ஒரே மாதத்தில் 51 லட்சம் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஸ்பெசல் இன்டென்சிவ் ரிவிசன் என்ற செயல் திட்டத்தை உடனே நீக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.