குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!
திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை
திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச் சிறைகள் மற்றும் கோவை மத்திய சிறையில் மொத்தம் 6 அமா்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் விக்னேஷ் மாது முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 40 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், 23 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு 14 போ் விடுதலை செய்யப்பட்டனா். மீதமுள்ள வழக்குகள் மேல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன.
நீதித் துறை நடுவா்கள் செந்தில்ராஜா, நதியா, பாத்திமா, தனலட்சுமி, விஜயலட்சுமி, ஷப்னா, தேன்மொழி, தரணிதா், உமாதேவி ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.