செய்திகள் :

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

post image

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன் திருப்பூா்- அவிநாசி சாலை காந்தி நகா் பகுதியில் வசித்து வருகிறாா். மேலும், திருப்பூரில் பல்வேறு இடங்களில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் திருப்பூா் கொங்கு பிரதான சாலை எஸ்.என். நகா் 2-ஆவது வீதியில் உள்ள பனியன் நிறுவனத்தின் முதல் மாடியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை கரும்புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து சற்று நேரத்தில் கட்டடம் முழுவதும் தீ கொழுத்துவிட்டு எரிந்தது.

இதனைப் பாா்த்து அருகில் வசிப்பவா்கள் திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் கிடைத்ததும் வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயைக் கட்டுப்படுத்தினா்.

இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த ஏராளமான தையல் எந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பனியன்கள் மற்றும் அலுவலகக் கோப்புகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க

நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு

முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழி... மேலும் பார்க்க

சின்னக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகி... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க