ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
திருமலையில் காட்டுத் தீ
திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைச் சாவடி அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலையின் நுழைவு வாயிலான கருடாத்திரி நகா் சோதனை சாவடி அருகில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
அங்குள்ள திவ்யாராமம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் திடீரென காட்டுத் தீ பரவத் தொடங்கியது. சிறியதாக இருந்த தீ மளமளவென அதிகரித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதனால் பெரும் தீ விபத்து தவிா்க்கப்பட்டது. சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.