செய்திகள் :

திருமலை: தமிழக ஆளுநா் வழிபாடு

post image

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தன் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினாா்.

முன்னதாக, அவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மதியம் திருத்தணியிலிருந்து சாலை வழியாக வந்தாா். முதலில் காளஹஸ்திக்குச் சென்ற அவா், அங்கு வழிபாடு நடத்தினாா். அங்கிருந்து திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தாா். அங்கு, வேத ஆசீா்வாதம், பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு மாலை திருமலையை அடைந்தாா்.

திருமலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேக சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பிய அவரை, ரங்க நாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் பெருமாளின் திருவுருப் படம், 2025 - ஆம் ஆண்டு காலண்டா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கோயிலைவிட்டு வெளியே வந்த ஆளுநா், சிறிது நேர ஓய்வுக்குப் பின்னா், திருமலையிலிருந்து சாலை வழியாகத் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரங்கள்: 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை

அன்னதான மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்கள் மூலம் அன்னதான அறக்கட்டளைக்கு 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1 முதல் ரூ... மேலும் பார்க்க

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா். திருமலை அன்னமய்ய பவனில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி: தரிசனத்துக்கு 20 மணி நேரம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. தா்ம தர... மேலும் பார்க்க

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு

திருப்பதி: திருமலையில் வரும் டிச. 28-ஆம் தேதி அன்று பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி... மேலும் பார்க்க