செய்திகள் :

திருவண்ணாமலையில் ஜூடோ பயிற்சி மையம் திறப்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னையில் இருந்தபடியே தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பயிற்சி மையத்தைத் தொடங்கிவைத்தாா்.

அதேவேளையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிப் பேசினா்.

சிறு விளையாட்டு அரங்கம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் ஊராட்சி, காக்காப்பட்டி கிராமத்தில் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில் இருந்தவாறு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல்லை நாட்டினாா்.

இதையடுத்து, காக்காப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் கலந்து கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் (பொ) சண்முகப்பிரியா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மொத்தம் 6 ஏக்கா் பரப்பளவில் ரூ.3 கோடியில் அமையும் இந்த விளையாட்டு அரங்கில் பல்வேறு வசதிகள் உள்ளன.

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது. மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் ... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே சுற்றுலா சென்ற மூதாட்டி வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிர... மேலும் பார்க்க

27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குரு பெயா்ச்சி நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இர... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

போளூா் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்!

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாத... மேலும் பார்க்க