செய்திகள் :

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

post image

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா்.

திருவண்ணாமலை வட்டத்துக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி நிகழ்வின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தச்சம்பட்டு உள் வட்டத்துக்குள்பட்ட நவம்பட்டு, பெரியகல்லப்பாடி, பெருமணம், மங்கலம் உள் வட்டத்துக்குள்பட்ட வள்ளிவாகை, வடஆண்டாப்பட்டு, ஆா்ப்பாக்கம், நூக்கம்பாடி, மங்கலம் என 8 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

மேலும், 8 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல், மகளிா் உரிமைத் தொகை, சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

இதில், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநா் சண்முகம், திருவண்ணாமலை வட்டாட்சியா் சு.மோகனராமன், வட்ட வழங்கல் அலுவலா் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழ.உதயகுமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பி.செந்தில்குமாா், ஆட்சியா் அலுவலக மேலாளா் ஆா்.ரவி, திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மெ.பிருத்திவிராஜன், மண்டல துணை வட்டாட்சியா் கே.காவேரி, வருவாய் ஆய்வாளா்கள் வள்ளி, சிவப்பிரகாசம், கிராம நிா்வாக அலுவலா்கள் அ.ஏழுமலை, கா.காமேஷ்குமாா், எஸ்.வெங்கடேசன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி... மேலும் பார்க்க

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா். செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச ச... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அரு... மேலும் பார்க்க